Skip to main content

Tamil 6th to 12th



Class

Tamil

Answer

6

மருந்து என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

அகநானூறு - 147, திருக்குறள் - 952

6

கோடை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

அகநானூறு - 42

6

பொன்னொடு வந்து கறியோடு பெயரும் ……என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

அகநானூறு 149

6

தமிழன் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

அப்பர் தேவாரம்

6

தமிழன் கண்டாய் என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

அப்பர் தேவாரம்

6

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

ஆசாரக்கோவை

6

வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

கலித்தொகை - 101, திருக்குறள் - 81

6

கடல்நிர் முகந்த கமஞ்சூழ் எழிலி என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

கார்நாற்பது

6

மீன் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை

6

பாம்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை - 239

6

முதலைஎன்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை - 324

6

செய் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

குறுந்தொகை - 72

6

பாலொடு வந்து கூழோடு பெயரும் …… என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

குறுந்தொகை 23

6

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

6

தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

சிலப்பதிகாரம்

6

ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல கொண்டதுவாம் என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

தமிழ்க்கும்மி

6

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்எது?

திருக்குறள்

6

அரசு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

திருக்குறள் - 554

6

தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

தொல்காப்பியம்

6

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

தொல்காப்பியம்

6

ஊர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், அகத்திணையியல் - 41

6

அன்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், களவியல் - 110, திருக்குறள் - 84

6

மகிழ்ச்சி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், கற்பியல், திருக்குறள்

6

ஒழி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், கிளவியாக்கம் - 48

6

உலகம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், கிளவியாக்கம் - 56, திருமுருகாற்றுப்படை - 1

6

உயிர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், கிளவியாக்கம், திருக்குறள்

6

சொல் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், புறத்திணையியல் - 75

6

முடி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், வினையியல்

6

புகழ் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

தொல்காப்பியம், வேற்றுமையியல் - 71

6

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

நற்றிணை

6

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

நற்றிணை

6

உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

நற்றிணை - 4

6

தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

நற்றிணை 183

6

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

நன்னூல் நூற்பா 462

6

கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

பட்டினப்பாலை

6

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

பதிற்றுப்பத்து

6

வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

பதிற்றுப்பத்து

6

வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

பதிற்றுப்பத்து - 15

6

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

பழமொழி நானூறு : 4

6

வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

பழமொழி நானூறு : 4

6

தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே என்ற பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள வரிகள் எது?

புறநானூறு

6

பார் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

பெரும்பாணாற்றுப்படை

7

திருக்குறளின் இன்பத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களில் எண்ணிக்கை?

25

7

திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

38

7

திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

70

7

ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் எத்தனை?

2 (நொ, து)

7

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

அகநானூறு

7

கொற்கையில் பெருந்துறை முத்து என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

அகநானூறு

7

பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் 49சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது?

கண்ணகி

7

பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு எது?

சேந்தன் திவாகர நிகண்டு

7

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

தனிப்பாடல் திரட்டு

7

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து  - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

திருக்குறள்

7

முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

நற்றிணை

7

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

நன்நூல்

7

புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

நெடுநல்வாடை

7

அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

பதிற்றுப்பத்து

7

இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

பரிபாடல்

7

ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்த இடம்பெற்றுள்ள நூல்?

பரிபாடல்

7

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் எது?

பழமொழி நானுறு

7

ஈன்ற வயிறோ இதுவே தோண்றுவன் மாதே போர்க்களத் தானே என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

7

கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

புறநானூறு

7

செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

புறநானூறு

7

பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

7

கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

மணிமேகலை

7

புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

மணிமேகலை

7

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலை என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

முக்கூடல் பள்ளு

8

பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள மீதமிருக்கும் சொற்கள்என்ற நூலை தொகுத்தவர் யார்?

அ.வெண்ணிலா

8

உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக இருந்தனநெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

அகநானூறு

8

எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகோல் மாறிலிகொள்என்ற பாடல் வரியை இடம்பெற்ற நூல்?

கலிங்கத்துப்பரணி

8

கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

8

குழல்இனிது யாழ்இனிது என்பதன் மக்கள் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

திருக்குறள்

8

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் கான்என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

திருப்பாவை

8

ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

தொடுவானம்

8

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுதஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

நாச்சியார் திருமொழி

8

போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவைஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?

நீலகேசி

8

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பலம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

8

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன்என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

8

பாய்மரக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாய் பற்றி கூம்பொடு மீப்பாய் களையாது என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

புறநானூறு

8

மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமரக்குந்துஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

8

வெங்குறல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டிஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளன நூல்?

பெரியபுராணம்

8

சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின் எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள எழுத்து எது?

வட்டெழுத்துக்கள்

8

வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை?

வேற்றுமைக் தொடர்கள் என்பர்

9

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்?

அறிஞர் அண்ணா

9

சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள உட்பிரிவின் பெயர் என்ன?

இலம்பகம்

9

காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளொதை என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி?

உவமை அணி

9

நந்தின் இளன்சினையும் புன்னைக் குவிமொட்டும்என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி?

உவமை அணி

9

சிறுபன்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் இடம்பெற்றுள்ளன?

ஐந்து கருத்து

9

எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மறுப்பு கலங்கினர் பலர் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

கலித்தொகை

9

எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தாய்மொழி இடம்பெற்றுள்ளது?

கிரேக்க மொழி

9

கிரீட் தீவிலுள்ள ----- என்னுமிடத்தில் உள்ள அரண்மனை சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன?

கினோஸஸ்

9

ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

குருக்

9

செய்தி என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

சிவப்பு ரிக்ஸா

9

குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசித்து உளம்தொட்டு உழுவயல்என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

சிறுபன்சமூலம்

9

வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

சீவகசிந்தாமணி

9

கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

தமிழ்

9

தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழேஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

தமிழ்விடு தூது

9

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமேஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?

தமிழ்விடு தூது

9

வெள்ளமதிப் பட்டது எனவெரீஇப்பு லினம்தாம்என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ளன அணி?

தற்குறிப்பேற்ற அணி

9

கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

தெலுங்கு, குடகு

9

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

தொல்காப்பியம்

9

கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

தோடா

9

கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ளஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

நாச்சியார் திருமொழி

9

கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

பர்ஜி

9

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

புநானூறு

9

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் என்ற செய்தி இடம் பெற்ற நூல்?

புறநானூறு

9

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

9

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

உண்பது நாழி உடுப்பவை இரண்டேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே, என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனேநன்னடை நல்கள் வேந்தர்க்கு கடனேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

யாது ஊரே யாவரும் கேளிர்என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

பெரியபுராணம்

9

ஆறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

மணிமேகலை

9

விழாவறை காதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

மணிமேகலை

9

மண்உற ஆழ்ந்த மணிநீரிக் கிடங்கின் வின்உற ஓங்கிய என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

மதுரைக்காஞசி

9

கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

மலையாளம், கன்னடம்

9

எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது?

மொரீசியஸ், இலங்கை

10

கடும் பகட்டும் யானை நெடுந்தேர்க் கோதை திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

அகநானூறு

10

பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

அகநானூறு

10

சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் இடம்பெற்றுள்ள பாவகை?

அகவற்பா (ஆசிரியப்பா)

10

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்?

இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

10

வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் ----- தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன?

இராமாயணம், மகாபாரதம்

10

கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் எது?

ஐங்குறுநூறு

10

காலக்கணிதம் என்ற கவிதை தொகுப்பு யாருடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

கண்ணதாசன் கவிதை தொகுப்பு

10

வள்ளல் யில்லையோர் வறுமை யின்மைமியற்றின்மை என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

கம்பராமாயணம்

10

பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அதன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

கலித்தொகை

10

அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமியே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! - என்ற வரி இடம்பெற்ற நூல் எது?

கனிச்சாறு

10

ஒருவன் இருக்கிறான் எந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

கு.அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு

10

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை

10

ஞானம் என்ற கவிதை தி.சொ.வேணுகோபாலனின் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

கோடை வயல்

10

தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

10

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்கள்?

சிலப்பதிகாரம்

10

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

10

ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)

10

எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

தண்டியலங்காரம்

10

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மரித்துக்கை காட்ட என்ற பாடலில் இடம்பெற்ற அணி எது?

தற்குறிப்பேற்ற அணி

10

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

திருத்தணிகையுலா

10

தகக தகதக தந்தெந்த தந்தத்தக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெறுக என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

திருப்புகழ்

10

நுண்ணிய கேள்வி யாரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தனிந்தது என்னா என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

திருவிளையாடற் புராணம்

10

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?

தீவக அணி

10

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

நற்றிணை

10

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

நன்னூல்

10

தூது செல்ல காற்றை பெண் ஒருத்து அழைத்ததாக எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது

10

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர், வினையாலனையும் பெயரும் முறையே?

பாடல்; கேட்டவர்

10

குலசேகர ஆழ்வார் வித்துக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே?

பால் வழுவமைதி, திணை வழுவமைதி

10

அறம் அற க்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

புறநானூறு

10

குரல் உணங்கு விதைத்திணை உரல்வாய்ப் பெய்து - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

புறநானூறு

10

நளிஇரு முந்நீர் நாவை ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

10

நீரற வரியாகக் கரகத்து என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

10

நெருநை வந்த விருந்தினற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்  - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

10

நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்காக பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

10

காலின் ஏழடி பின் சென்று என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

பொருநராற்றுப்படை

10

அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?

மலைபடுகடாம்

10

மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

முக்கூடற்பள்ளு

10

செம்போ நடிச்சிறு கிங் கினியோடு சிலம்பு கலந்தாட என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

10

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல், நோக்கி ஆய்மகள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

முல்லைப்பாட்டு

10

நன்னர் நன்மொழி கேட்டனம்  - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

முல்லைப்பாட்டு

10

உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்  - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

மோனை, எதுகை

10

தர்க்கத்திற்கு அப்பால் என்னும் சிறுகதை எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளது?

யுகசந்தி என்னும் தொகுப்பு

10

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

விவேகசிந்தாமணி

10

திருக்குறள், நாலடியாரில் இடம்பெற்றுள்ள பாவகை?

வெண்பா

10

யாருடைய படத்தின் கீழ் மற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை என்ற வரி இடம் பெற்றிருந்தது?

ஸ்டீபன் ஹாக்கிங்

11

கர்நாடகத்தில் மலையை குறிக்கும் சொல்லான 'மலே' என்ற சொல் ----- இடப்பெயர்களில் இடம்பெற்றுள்ளது?

15

11

சோடிய விளக்காய் மாலைநேரத் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

உரு உவமை (நிறம்)

11

திருமலை முருகன் பள்ளு பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை எது?

கலித்துறை, கலிப்பா, சிந்து

11

கொல்லேற்று கொடஞ்சுவானை மறுமையும் புல்லாலே, ஆயமகள் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

கலித்தொகை

11

நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

குறுந்தொகை

11

11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

11

உறுபகை வறுமைநோய் ஓட ஒட்டிமேல் குறைவற்ற மனுமுறைக் கோன் (ந) டாத்திநீள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

சீறாப்புராணம்

11

தொலைந்து போனவர்கள்' என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது?

சுட்டு விரல்

11

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

திரிகடுகம்

11

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

திருமந்திரம்

11

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமந்திரம்

11

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமந்திரம்

11

துணையாய் வருவது தூயநற் கல்வி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமந்திரம்

11

மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கனி வந்துளம் ஆடும்என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமலை முருகன் பள்ளு

11

விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிளவ என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

திருமுருகாற்றுப்படை

11

சேயோன் மேய மைவரை உலகம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

தொல்காப்பியம்

11

முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

தொல்காப்பியம்

11

உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடும் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

நன்னூல்

11

மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

நிறம் உருவகம்

11

உற்றில் வாய்ஒலி கொள்ளும் செவியென ஒதுக்குகின்றாய் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

நீலகேசி

11

மொக்கலவாத சருக்கம், புத்தவாத சருக்கங்கள் இடம்பெற்றுள்ள நூல்?

நீலகேசி

11

யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

நீலகேசி

11

ஆவேசப் புயல்களாகும் அசைக்க முடியாத ஆகாசப்பூ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

பயன் உருவகம்

11

வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

பயன் உவமை

11

தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்! ' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

புரட்சிக்கவி

11

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

11

நீலவயலின் நட்சத்திர மணிகள் என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

மெய் உருவகம்

11

சுருங்கிய குடையை பொல்லாத தோன்றும் அசோகமரம் என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

மெய் உவமை (வடிவம்)

11

எண்ணவலை பின்னும் மூளை சிலந்தி என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

வினை உருவகம்

11

அவர்கள் மூளையில் விதையைப்போல் தூவப்பட்ட வேண்டிய அறிவு ஆணையைப்போல் அறையப்படுகின்றது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை எது?

வினை உவமை

12

புறநானூறு எத்தனையாவது பாடலில் யவனரது கப்பல்கள் பற்றி குறிப்பு இடம் பெற்றுள்ளது?

56 - வது பாடலில்

12

இதில் வெற்றி பெற என்ற கவிதையில் இடம் பெற்ற பா வகை என்ன?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12

உரோமாபுரிகி சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது?

சிலப்பதிகாரம்

12

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

தண்டியலங்காரம்

12

குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றது?

திருக்குறள்

12

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுத் தலைப்படுவர் என்ற வரி இடம் பெற்ற நூல்?

நாலடியார்

12

இளந்தமிழே! என்ற கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

நிலவுப்பூ

12

ஈகையின் பெருமை சேர்க்கும் வரி அறிமடமும் சான்றோர்க்கு அணி என்ற வரி இடம் பெற்ற நூல்?

பழமொழி நானூறு

12

புகளூர் கல்வெட்டின் 3 - ம் வரியில் இடம் பெற்ற பெயர்கள் யாவை?

பெருங்கடுங்கோன், இளங்கடுகோன், இளங்கோ என்ற பெயர்கள்

Comments

Popular posts from this blog

Excel Steps

  1.          EXTRACT A SPECIFIC WORD FROM CELLS AND COUNT  =COUNTIF(A1:A6,"*sap*")   2.          SARAVANA KUMAR =SARAVANA & KUMAR   3.          TEXT TO COLUMN SPLIT THE DETAILS   4.          FILL Select and pull the row width give the justify   5.          BOOK RACK ALLOCATION =IF(COUNT(SEARCH("OPERATING SYS",A16898)),"R1","")   6.          FIND THE UPPER CASE AND LOWER CASE SENTENCES =EXACT(A1,UPPER(A1)) =EXACT(A1,lower(A1)) =EXACT(B1,PROPER(B1)) or =SUBSTITUTE(B1,PROPER(B1),"x...